தனுஷ் இயக்கத்தில் உருவான ‘பவர் பாண்டி’ பட டிரெய்லர்!

ஹீரோ,புரொடீயூசர்,பாடலாசிரியர், சிங்கர் என்று திரையுலகில் அடுத்தடுத்து அவதாரங்கள் எடுத்து வரும் தனுஷின் முதல் இயக்குனர் அவதார, பவர் பாண்டி.

ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள பவர் பாண்டி என பெயரில் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது ப.பாண்டி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியாகி உள்ளது.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் ஸ்டண்ட்மேன் ஒருவரைப் பற்றிய கதையாகும். இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனது கதாபாத்திரம் சுமார் 30 நிமிடங்கள் வருவது போன்று திரைக்கதை அமைத்திருக்கிறதாம்.