”அ. அ. அ. -படத்தில் ஐயாவுக்கு நாலு கேரக்டர்” – சிம்பு தகவல்

0
411

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார்.

இப்படம் குறித்து சிம்புவிடம் கேட்ட போது, “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.

இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங் களில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும், இதை வெளியிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று தோன்றியதால் சொல்லிவிட்டேன். நான்காவது கதாபாத்திரம் படத்தில் உங்களுக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here