சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரஜினியின் ‘வேலைக்காரன்’ டைட்டிலை வைத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் – ஆர்.டி.ராஜா கூட்டணியில் உருவான ‘ரெமோ’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த ‘வேலைக்காரன்’ படத்திற்காக, மோகன்ராஜாவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாரினி நடிகையான நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என்று பல முன்னணி நடிகர், நடிகையர் நடித்து வருகின்றனர்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – ராம்ஜி, படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த ‘வேலைக்காரன்’ படத்தில் பணியாற்றி வருவது  மேலும் சிறப்பு.

உழைப்பாளர்களின் மகிமையை பற்றி பேசப் போகும் இந்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் முதல் போஸ்டர், உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.அதைத் தொடர்ந்து ‘வேலைக்காரன்’ திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.