அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இதனிடையே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். எப்போதும் பொது, சினிமா விழாக்களுக்கு ஃப்ரெஷ்ஷாக தாடியில்லாமல் வந்து கொண்டிருந்த விஜய் சமீபகாலமாக தாடி வளர்த்து கொண்டு வருகிறார். அப்படி தாடியுன் விஜய் நடிக்கும் கேரக்டரை சஸ்பென்ஸாக மறைத்து செதுக்கி கொண்டு இருக்கிறார், அட்லீ. விஜய் தாடியுடன் நடிக்கும் அந்த காதாபாத்திரத்தின் ஜோடியாக, ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

விஜய்யுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கும் கேரக்டர் ரோலுக்கு வடிவேலு செலக்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள ஒருநாள் கால்ஷீட்டுக்கு தினசரி ரூ. 9 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் வடிவேலு. இப்போது விஜய்யுடன் நடிக்கும் படத்துக்காக லம்ப்பாக 50 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்து இருக்கிறார் அட்லீ. தினசரி சம்பள அடிப்படையில் ஒப்பந்தம் செய்யாமல் 50 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக ஒரு பெருந்தொகையைப் பேசி அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்து விட்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த செல்லவுள்ளது படக்குழு.