இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்! – ‘X வீடியோஸ்’ இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி

 இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்! – ‘X வீடியோஸ்’ இயக்குநர் சஜோ சுந்தர் பேட்டி

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர் டெய்ண் மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகி யுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது. நாளை ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர். "நிறைய பேர், எங்கள் படத்தை கசமுசா படமென்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். டைட்டில் அப்படி இருந்தாலும், இந்தப் படத்தில் நான் மையப்படுத்தி சொல்லியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை. வெறுமனே சதையைக் காட்டி கதை இல்லாமல் எடுக்கப்பட்ட படமல்ல இது. கொஞ்சம் விளக்கமா…
Read More
எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் விவரித்த போது ,” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும்.…
Read More