ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு ‘

ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு ‘

  தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம். இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள் .அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழகஅரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'விழித்தெழு'. ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை சி எம். துரை ஆனந்த் தயாரித்துள்ளார். சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட. இன்றைய சூழலில் அனைவரது வாழ்க்கையிலும் இணையதள மோசடியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் .அதைத் தட்டிக் கேட்கும் விதமாக…
Read More