30
Nov
MX ஒரிஜினல் இணையத்தொடரான 'தாராவி பேங்க்' வலுவான கதைக்களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய கதை ஆகும். இது போன்ற ஒரு பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதியற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள். இந்தத் தொடரில் JCP ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவன்தான் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவன் விரும்புவதில்லை, அவனுக்கு என்ன தேவையோ…