சதீஸின் வித்தைக்காரன் மேஜிக் காட்டியதா ??

சதீஸின் வித்தைக்காரன் மேஜிக் காட்டியதா ??

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஸ் நாயகானாக நடித்திருக்கும் படம் வித்தைக்காரன். நகைச்சுவையில் இருந்து டிராக் மாறிய சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். சென்னைக்குள் கள்ளக்கடத்தலில் கொடி கட்டிப்பறக்கும் மூன்று கேங் அந்த மூன்று கேங்கிலும், மேஜிஸியன் ஒருவன் உள்ளே குட்டையை குழப்பி அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறான். எப்படி ? எதற்காக ? என்பது தான் கதை. காமெடி கலந்த வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படமாக வந்திருக்கிறது “வித்தைக்காரன்”. ஒரு வகையில் படத்திற்கு பலமும் அதுதான் மைனஸும் அது தான். ஏனென்றால் படத்தின் மிக சீரியஸான காட்சிகளில் காமெடி செய்கிறார்கள். காமெடி காட்சிகளில் சீரியஸாக இருக்கிறார்கள். சதீஷ் அவருக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பு ஆனால் தவறவிட்டிருக்கிறார். ஒரு மேஜிக்மேனுக்குரிய எந்த உழைப்பு உடல்மொழியும் இல்லை. சரி இத்தனை பெரிய புத்திசாலி அத்தனை பெரிய கேங்கை ஏமாற்றும் காட்சிகளில் வெறும் காமெடியனாகவே தெரிகிறார்.…
Read More