17
Jul
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர். இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு "விஷால்-34" என அழைக்கப்பட்டு வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார்.தனது முதல் படமான தமிழ் படம் துவங்கி, அனைத்து படங்களிலும் நல்ல கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்ஷன் என ரசிகர்களுக்கு…