வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன்

வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன்

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன். படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இவரின் சிறப்பான நடிப்பு, பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் து.பா. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக பிப்ரவரி 4 வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் நடிகர் அகிலன் SPR. படம் முழுக்க வரும் இப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. இளம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அகிலன் தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பு திறமையால், அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மூலம் அறிமுகமான இவர் சிறிது சிறிதாக வளர்ந்து நாயகன் அந்தஸ்திற்கு…
Read More
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்

இயக்கம் - து ப சரவணன் நடிகர்கள் - விஷால், யோகிபாபு, ரவீனா ரவி தங்கையை கொன்ற வில்லனை தேடி பழிவாங்கும் நாயகன் இது தான் கதைக்கரு. எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அப்பா போலீஸ், அன்பான தங்கை என அழகான குடும்பம் இதில் ஒரு காதலி வேறு, நியாயம் தர்மம் என பேசிக்கொண்டு திரிகொண்டு திரிகிறார். இடையில் சில ரௌடிகளால் தங்கைக்கு தொல்லை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணுக்கு வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களின் பிரச்சனை. அது இல்லாமல் இன்னொரு பக்கம் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல் வாதி வில்லனுக்கும் பிரச்சனை இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது என்பது தான் படம். கதையை சொல்லும் போது நன்றாக தான் இருக்கிறது ஆனால் படம் தான் கொடூர அனுபவத்தை தருகிறது விஷால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்பத்திற்காக பழி வாங்குவார் என தெரியவில்லை.…
Read More
750 திரையரங்குகளில் “வீரமே வாகை சூடும்” படம் !

750 திரையரங்குகளில் “வீரமே வாகை சூடும்” படம் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணனன் எழுதி இயக்குகிறார்.…
Read More
கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது படத்தின் இறுதி…
Read More
எப்படி இருக்கிறது “எனிமி” –   திரை விமர்சனம் !

எப்படி இருக்கிறது “எனிமி” –   திரை விமர்சனம் !

இயக்கம் - ஆனந்த்சங்கர் நடிகர்கள் - விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன் தாஸ் கதை : சிறு வயதில் போலீஸுக்கு பயிற்றுவிக்கப்படும் இரு சிறுவர்கள் வளர்ந்த பிறகு, எதிரெதிராக மோதுகிறார்கள். சிங்கப்பூரில் , மளிகை கடை வைத்திருக்கும் விஷால் அங்கு நடக்கும் ஒரு விபத்துக்கு காரணம் யார்  என தேடுகிறார். சிறு வயதில் தன்னுடன் பயிற்சி எடுத்த நண்பன் என்பது தெரிய வருகிறது. பின் இருவருக்கும் நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை. படத்தின் முதல் பத்து நிமிடம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. இரண்டு அறிவுஜீவிகள் அவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் அதில் யார் ஜெயிப்பார்கள் எனும் ஒன்லைன் எல்லாம் அட்டகாசமாக தான் இருக்கிறது. ஆனால் திரைக்கதையும் அதை படமாக்கிய விதமும் கொடூரமாகவிட்டது. விஷால் சிங்கப்பூரில் அறிமுகமாகும் காட்சிகள் அதன் பின்னணியான தமிழ் குடியிருப்பு, என எதுவுமே ஒட்டவில்லை சுவாரஸ்யமாகவும் இல்லை. படத்தின். ஆரம்ப…
Read More
மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் நடிகர் விஷால் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்திருந்தார் அந்த பேட்டியின் போது துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் நடந்த பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போது, மிஷ்கின் எனக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து விஷால் கூறியிருந்ததாவது.. ஜனவரியில் மீண்டும் துப்பறிவாளன் ஷூட்டிங் போகிறோம்.. ஏப்ரலில் படம் வந்து விடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டு விடக் கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும். VFF நிறுவனமே ஒரு…
Read More
எனிமி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

எனிமி திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

  விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது , நடிகர்…
Read More
கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

விஷால் ஹீரோவாக- அதுவும் இந்தியன் மிலிட்டரியில் அதிகாரியாக பணி புரிபவர் என்ற எல்லைக் கோட்டை வைத்து பின்னப்பட்டக் கதை.. அதிலும் முழுக்க டிஜிட்டல் மயமாகி நம் நாட்டில் இப்படி எல்லாம் மோசடியும், க்ரைமும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சில பல விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அளிக்க முயன்றிருப்பதால் கவனிக்க வைக்கிறது இந்த சக்ரா. கதை என்னவென்றால் ஆகஸ்ட் 15. நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில் சிங்காரச் சென்னையில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 வீடுகளில் ஒரு கொள்ளை கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டி ரூ.7 கோடி பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கிறது. கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் மிலிட்டரி குடும்பத்தைச் சேர்ந்த விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர் கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்க மடைந்து விட்ட.சம்பவம் குறித்து கேள்விப் பட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது தனது தந்தை வாங்கிய சக்ரா…
Read More
விஷாலின்  ‘சக்ரா’ பட ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸால் ஹேப்பி!

விஷாலின் ‘சக்ரா’ பட ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸால் ஹேப்பி!

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் தற்போது திரையிடப்பட்டு வருகின்றன. நேற்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்கள் மூலம் ‘சக்ரா’ படத்திற்குப் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர். டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா...? வயது, தொழில், படத்தில் நேர்நிலை அம்சம் எது..? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது..? எதிர்மறை அம்சம் எது..? பிடிக்காத காட்சி எது..? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன..? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பெறப்பட்டன. படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையான பதில்களை அளித்து தங்களது திருப்தியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் ‘சக்ரா’ படக் குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Read More
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

கோலிவுட்டின்  தலைமை செயலகமான  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். இது தொடர்பாக  அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தில், விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் இதோ : “நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன். இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். என் ராஜினாமா முடிவுக்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன் : 1. முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக…
Read More