மனைவியை இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்’ என்று கலாய்த்த ரஹ்மான்

மனைவியை இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்கள் ப்ளீஸ்’ என்று கலாய்த்த ரஹ்மான்

கடந்த மார்ச் 30ம் தேதி 2020, 2021, 2022 ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 'மறக்குமா நெஞ்சம்....' பாடலுக்காக 2022ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது மற்றும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்', 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக 2022ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என இரண்டு விருதுகளை வென்றிருந்தார் ரஹ்மான். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பேசிய ரஹ்மான், " 'எல்லா புகழும் இறைவனுக்கே'. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனமன், சிம்பு எல்லோருக்கும் நன்றி. இந்த விருதை என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். "என்னுடைய குரலின் முதல் ரசிகை என் மனைவிதான். அவர்தான் என் குரல் நல்லா இருக்கு என்று முதன்முதலில் என்னிடம் சொன்னவர். அந்த தைரியத்தில்தான் பாடல்கள் பாட ஆரம்பித்தேன். இப்போதும், பாடல்கள் மட்டுமல்ல நான் நேர்காணல்களில் பேசுவதைக் கூட கேட்டுக்கொண்டே…
Read More