16
Dec
இயக்கம் - அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் நடிகர்கள் - விஜய் குமார் , தயாரிப்பு - லோகேஷ் கனகராஜ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார். வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான். நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல்…