அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜயின் படத்துடன் மீண்டும் மோதலா!

அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜயின் படத்துடன் மீண்டும் மோதலா!

முன்பெல்லாம் நடிகர் அஜித்தின் கால்ஷீட் கிடைக்காமல் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில், அவரின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டே லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தொடங்காமல் இருப்பது பலருக்கும் புரியாத புதிர் ஆக உள்ளது. இந்தப்படம் அஜித் நடிக்கும் 62-வது படமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இப்படம் குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்குவார் என்றும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து ஜனவரி மாதம் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு சில நாள் முன் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டனர். விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பின்னர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனியை ஒப்பந்தம்…
Read More
மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது அஜித்தின் விடாமுயற்சி!

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது அஜித்தின் விடாமுயற்சி!

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்முலம் அஜித்துக்கு ஜோடியாக 5வது முறையாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு துவங்கவில்லை.   இந்நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
Read More