தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

தளபதி விஜய் சார் அவர் தான் இந்தப்படத்தை துவங்கி வைத்தார் ! “ வித்தைக்காரன்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சதிஸ்!.

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஸ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை சிம்ரன் குப்தா பேசியதாவது.. தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஸ்க்கு நன்றி. வித்தைக்கரான் கண்டிப்பாக சிறந்த வெற்றிப்படமாக இருக்கும்; நன்றி. இயக்குநர் வெங்கி பேசியதாவது.. நிறைய புரடியூசரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். சதீஸ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார்.…
Read More