வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘சபரி’ !

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘சபரி’ !

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார்…
Read More
இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல! ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்  நடிகர் தேஜா சஜ்ஜா !

இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல! ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தேஜா சஜ்ஜா !

  பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் வினய் பேசியதாவது… இது ஒரு தெலுங்குப்படம், நான் செய்யும் முதல் தெலுங்குப்படமாக இருந்தது, ஒரு வகையில் அப்படித்தான் ஆரம்பமானது. சின்னப்படமாக தான் ஆரம்பித்தது ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது. இந்தப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. தயாரிப்பில் நிரஞ்சன், சைத்தன்யா ஆகியோர் படத்திற்காக…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

"போடா போடி" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் "தாரை தப்பட்டை" மற்றும் "விக்ரம் வேதா" போன்ற பல வெற்றிப் படங்களில் நடிச்சிருக்கார். அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று இருக்கார். நடிப்பு மட்டுமின்றி, வரலட்சுமி சமூக பணிகளில் ஈடுபட்டு உள்ளார். மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு வலுவான வக்கீல் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்பது இல்லாமல் பெண்கள் சார்ந்த படங்களின் அதிகமாக கவனம் செலுத்தி வாறார். இவர் தற்போது 50 படங்கள் நடித்து இருக்கிறார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..அது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாளை ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாளை ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார்

  பல்வேறு தொண்டு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள 'Institute of Child Health'-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 'ஜாய் ஆஃப் ஷேரிங்' என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், டாக்டர் வேல் முருகன் ஆகியோர் பேசினர். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது…
Read More