31
Jan
https://www.youtube.com/channel/UCmrWLfqeF2SqhwGcrOWh_Jg 4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது . சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை இன்று நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது "ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான talent hunt show-வான " வருங்கால சூப்பர் ஹீரோ 2022" நிகழ்ச்சியில்…