30
Apr
தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார். இந்தநிலையில், நடிகை வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இரங்கல் தெரிவித்தார். அதில், “என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.…