04
Oct
மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும், ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில் மிகவும் தேடப்படும் திருடர்களின் தளமான ஸ்டூவர்ட்புரத்தின் ஆபத்தான உலகத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்லும் ஒரு அற்புதமான டிரெய்லருடன் வந்துள்ளனர். மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது. கொள்ளையடிப்பதற்கு விதிகள் இருக்கும் நிலையில் நாகேஸ்வரராவின் வருகை…