08
Feb
பாலாவின் உதவியாளர் வள்ளுவன் 'ஓகே கூகுள்' என்கிற 7 நிமிடக் குறும்படத்தை இயக்கியுள்ளார். வள்ளுவன் பிரபல எடிட்டர் லெனினிடம் உதவியாளராக இருந்து எடிட்டிங் தொழில்நுட்பத்தையும் பாலாவிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் பயிற்சியையும் பெற்றவர். வள்ளுவனின் அண்ணன் தியாகராஜன் (நாடக கலைஞர் - திணை நிலவாசிகள்) 'தமிழ் ஸ்டுடியோ'வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்த னுக்கு ஒரு கண்காட்சி நடத்தினார்கள். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த எடிட்டர் லெனின் இவரைப் பற்றி விசாரிக்கவும் மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு அவரது உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர் கிஷோர், ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள். அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப் போய் பார்த்தபோது தான்…