10
Oct
வேலுநாச்சியார்' மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ மிக பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.'வேலுநாச்சியார்' வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது. அவர்களின் ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மாவின் அருமை திருமகனார் சிரிகாந்தசர்மாவை ஆறரை ஆண்டுக்கு…