12
Mar
Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். “கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது இந்நிகழ்வினில் இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் "ஒரு படத்தின் தரம் தெரிந்து தான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்து இருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்து இருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆக…