உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் பட டைட்டில் ‘நிமிர்’!

உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் பட டைட்டில் ‘நிமிர்’!

காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' என்ற படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தற்போது மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.  குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். மிகச்சிறிய உண்மைச் சம்பவத்தை எடுத்து யதார்த்தமாக படமாக்கப்பட்டது. நாயகன் பஹத் பாசிலை ஒருவன் அடித்துவிடுகிறான். அன்றுவரை யாருடைய பிரச்சனைக்கும் போகாத பஹத் பாசிலுக்கு அது அவமானமாகிவிடுகிறது. செருப்பை போட்டுக் கொள் என்று சொல்லும் போது, அவனை அடிக்காமல் செருப்பு போட மாட்டேன் என்று அப்போதைய வீம்புக்கு கூறிவிடுகிறான். தன்னை அடித்தவனை பஹத் தேடிச் செல்லும் போதுதான் அவன் வேலைக்காக துபாய் சென்றது தெரிய…
Read More
திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’.இந்தப் படத்தில் வித்தியாச இயக்குநரான ஆர்.பார்த்திபன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘டைகர் பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் மயில்சாமி, ‘நமோ’ நாராயணன், சுந்தர், ரமா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, கலை – வி.செல்வக்குமார், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனம் – பிருந்தா, தினேஷ், ஷோபி, தயாரிப்பு நிறுவனம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்,  தயாரிப்பாளர் – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – தளபதி பிரபு. அறிமுக இயக்குநரான தளபதி பிரபு, இயக்குநர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இன்றைய இளைய தலைமுறையினர் வசதியான…
Read More