08
Jun
மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக 'Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக' மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்,…