விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

  யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   'துடிக்கிறது மீசை'படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது, "நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன். படத்தின் கதை என்னவென்றால்,காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை…
Read More