04
May
* சென்னையில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு முடித்தவர். எத்திராஜ் கல்லூரியில் இரண்டே வருடங்கள் மட்டும் பி.பி.ஏ., படித்தார். அதன்பின், சினிமா என்ட்ரி. சினிமாவை அடுத்து ஒரு காதல் என்றால், அது உணவின் மீதுதான். செம foodie. சாப்பாட்டு ப்ரியை. அவர் மட்டுமல்ல, அவரின் நட்பு வட்டமும் உணவுப்ரியர்கள்தான். பயணங்களின் போது, அந்தந்த நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவது த்ரிஷாவுக்கு பிடித்தமான ஒன்று. இதுவரை வாங்கிய விருதுகள், ஷீல்டுகள் அத்தனையையும் தன் வீட்டு வரவேற்பறையில் அழகுற அடுக்கி வைத்திருக்கிறார். அந்த ஹாலில் தான், இயக்குநர்களிடம் கதைகள் கேட்கிறார். * 'மௌனம் பேசியதே'வில் ஆரம்பித்து 'லியோ' வரை 21 வருடங்களாக கதாநாயகியாக கோலோச்சும் த்ரிஷாவிடம், அவரது திரைப் பயணத்தைப் பற்றி பேசினால், ''மத்தவங்க சொல்லும் போதுதான், இவ்ளோ வருஷம் ஆகிடுச்சான்னு தோணும். மத்தபடி, நாம பண்ற வேலையை ரசிச்சு, பிடிச்சுப் போய் செய்தாலே போதும், நமக்கு நேரம் போறதே…