14
Feb
Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல் "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது..., "பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது. இசையமைப்பாளர் அன்பு மணியின், பங்களிப்பு அளப்பரியது. இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை மிகச்சரியான படைப்பாக உருவாக்கி இருக்கிறார். இணை தயாரிப்பாளர் பிரியா, எனது இடத்திலிருந்து இந்த பாடலை சிறப்பாக உருவாக்கினார். இந்த பாடலை கேட்டு உங்களுடைய ஆதரவைத் தாருங்கள் நன்றி." ஒளிப்பதிவாளர் விக்ரம்…