முதல் படம் போல் தோன்றவில்லை! பிதா பட அறிமுக விழாவில் திருமுருகன் காந்தி!

முதல் படம் போல் தோன்றவில்லை! பிதா பட அறிமுக விழாவில் திருமுருகன் காந்தி!

இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில் தயாரிப்பாளர் சுப்பிரமணி வழங்கும் 'பிதா' திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊட்க நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாக செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள். திருமுருகன் காந்தி பேசியதாவது., திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்க கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது.…
Read More