‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

  லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப்…
Read More
error: Content is protected !!