27
Mar
இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது ! நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு ஓடுவதைக் காணலாம். முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின்…