‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 ‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

  இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌ படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'தங்கலான்' திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை... பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், '' தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை…
Read More
2024 ஆம் ஆண்டு ஸ்ட்ரீமிங்க் ஆகவுள்ள படங்களின் பட்டியலை அறிவித்தது நெட்ஃபிலிக்ஸ்!

2024 ஆம் ஆண்டு ஸ்ட்ரீமிங்க் ஆகவுள்ள படங்களின் பட்டியலை அறிவித்தது நெட்ஃபிலிக்ஸ்!

  பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் விபி மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, "பொங்கல் பண்டிகை நாளில் மேலும் உற்சாகமூட்டுவதற்காக தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களின் பிளாக்பஸ்டர் படங்கள் அதன் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில்…
Read More
2024 இல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில்  ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்!!

2024 இல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது! பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் விபி மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, "பொங்கல் பண்டிகை நாளில் மேலும்…
Read More
மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்கலான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த தங்கலான் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் சியான் விக்ரம். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள…
Read More