தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

தமிழ்த் திரை வேலைநிறுத்தம்: திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

 சில வாரங்களுக்கு முன்னர் நம் தமிழ்த் திரையுலகில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் பல தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை மாற்றியமைத்து வந்தார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழ்த் திரையுலக வேலைநிறுத்தம் குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால் வருகின்ற மே 30 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும்…
Read More