என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை! ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்.சி!

என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை! ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்.சி!

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகை தமன்னா பேசியதாவது… சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள்…
Read More
பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவுக்கு தயாராகும்  விக்ரமின் ’ஸ்கெட்ச்’!

பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவுக்கு தயாராகும் விக்ரமின் ’ஸ்கெட்ச்’!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “. விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய் சந்தர்....”வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையில் பாமரர்கள், ஏழைகள் மட்டுமல்ல, படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் படமாக ‘ஸ்கெட்ச்‘ உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்‌ஷன் படமாகவும் ‘ஸ்கெட்ச்’ தயாராகி வருகிறது” என்றார்   இப் படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு “ அச்சி புச்சி ஸ்கெட்சு  “ என்ற பாடல்…
Read More