23
Nov
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் உடைய படங்கள், ஒவ்வொன்றும் வசூலில் புதிய சாதனைகள் படைக்கின்றன. கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது, ரசிகர்களிடம் மட்டுமல்லாது திரைத்துறையிலெயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் , நடிகர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய தற்போது டாக்டர் படப்புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை தொடந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் படம் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த XB Film Creators நிறுவனத்தின் சேவியர் பிர்ட்டோ தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து…