நடிப்பிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா நடிகர் விஜய்! இனி அரசியல் தான் எல்லாமே!

நடிப்பிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா நடிகர் விஜய்! இனி அரசியல் தான் எல்லாமே!

இனிமேல் அடிக்கடி ரசிகர்களை சந்திக்கவுள்ளார் நடிகர் விஜய், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.2026ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கொண்டு விஜய் இந்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியு திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்போது கையில் உள்ள படங்களை அவர் விரைவில் முடிப்பார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பார். அடுத்த பிப்ரவரிக்குள் நடிப்பை முடித்துவிட்டு பின் 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதை மனதில் வைத்தே வெங்கட்பிரபு படத்திற்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுது. வெங்கட் பிரபு படமே…
Read More
அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜயின் படத்துடன் மீண்டும் மோதலா!

அஜித்தின் விடாமுயர்சி படப்பிடிப்பு தொடங்குமா! விஜயின் படத்துடன் மீண்டும் மோதலா!

முன்பெல்லாம் நடிகர் அஜித்தின் கால்ஷீட் கிடைக்காமல் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும் நிலையில், அவரின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டே லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தொடங்காமல் இருப்பது பலருக்கும் புரியாத புதிர் ஆக உள்ளது. இந்தப்படம் அஜித் நடிக்கும் 62-வது படமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இப்படம் குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்குவார் என்றும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து ஜனவரி மாதம் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு சில நாள் முன் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டனர். விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பின்னர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனியை ஒப்பந்தம்…
Read More
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு  ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

தமிழ் திரையுலகினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ‘லியோ’ இந்தப் படத்தை இயக்குனர் லோகெஷ் கனகராஜ் இயக்குகிறார் . இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்திற்காக தயாராகிரார் நடிகர் விஜய், அந்த படம் முடிந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்துக்கு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். பார்லிமெண்ட் தேர்தல் வரும் நேரத்தில் ஒரு வருடம் படம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் இதனையடுத்து தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இது பத்திரிக்கையாளரிடம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது ‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர் களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
Read More
தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுது. மேலும் ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துகிட்டிருக்குது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கயிருப்பதாக செய்திகள் வருகின்றன.படத்திற்கு படம் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. இதுஒருபக்கம் இருக்க தளபதி 68 படம் விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களின் மூலம் வெங்கட் பிரபு புதுமை படைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன .பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமானதாக இருக்கும். அதைப்போல இப்படம் வித்யாசமாக இருக்கும் என்றும், படத்தைப்போல படத்தின் ப்ரோமோஷன்களும் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும்…
Read More