ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கலியுகம்’ அப்டேட்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் ‘கலியுகம்’ அப்டேட்!

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் 'கலியுகம்'. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது. போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'கலியுகம்', திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Read More
மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

மோலிவுட்டின் காமக்கன்னியாக இருந்த ஷகிலா-வின் வலி மிகுந்த வாழ்க்கைப் படம்!

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென் இந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காம படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலக் கட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்பதினராலேயே புறக்கணிக்கப் பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு…
Read More
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும்? – ராதாகிருஷ்ணன்!

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும்? – ராதாகிருஷ்ணன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டி யிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அவருடன் ஒரு மினிப் பேட்டி.. .என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம். நவீன…
Read More