கண்ணீருடன் பிரியாவிடை😭.. டி.பி.கஜேந்திரன் எனும் நான்…!

கண்ணீருடன் பிரியாவிடை😭.. டி.பி.கஜேந்திரன் எனும் நான்…!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(பிப் 05) உயிர் பிரிந்தது. இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குநர் டி. பி. கஜேந்திரன். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ‘இவர் எங்க ஊரு காவல்காரன்’ ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிலாஸ் மாதவன்’, ‘சீனா தானா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், ‘பந்தா பரமசிவம்’, ‘சந்திமுகி’, ‘வேலாயுதம்’, ‘வில்லு’, ‘பேரழகன்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிபி கஜேந்திரன் தன்னைப் பற்றி சொல்லி இருந்த முன் கதைச் சுருக்கமே அஞ்சலி செய்தியாக இதோ: அன்பு நண்பர்களுக்கு வணக்கம், எனது படங்கள் பற்றி…
Read More