06
Mar
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் பானு, நடிகை மெலடி, வசனகர்த்தா தமிழ் பிரபா, படத்தின் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், காஸ்ட்யூம் டிஸைனர் ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,…