02
Feb
Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஹாலிவுட் சைஃபை படங்கள் இங்கு திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம் தாய்மொழியில் அதிகமாக சயின்ஸ் பிக்சன் படங்கள் உருவாவதில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில், இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம். இப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இருவருமாக இணைந்து இப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு அசத்தலான சயின்ஸ் பிக்சன் படமாக இப்படம் இருக்கும். இப்படத்தில் ஆதித்யா…