31
Mar
கோலிவுட்டில் தனக்கென தனி அடையாளம் கொண்டுள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR.பிரகாஷ் பாபு, SR.பிரபு தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத் தில் கார்த்தி நடிக்கும் படம் ‘சுல்தான்’. . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த சுல்தான் படத்தில் நடித்த அனுபவங்களை கார்த்தி பகிர்ந்து கொண்டது: பாக்கியராஜ் சுல்தான் கதையை பற்றி ஒரு வரியில் கூறும் போது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கை லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதை செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம். இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக்கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள்தான். ஆகையால் நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காக செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் சுல்தான். அதன் பிறகுதான் அவனுக்கு தெரிகிறது…