18
Nov
சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. நாளை (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, முனீஸ்காந்த், மதுரை முத்து, ‘குக் வித் கோமாளி’ புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் படத் தொகுப்பு செய்துள்ளார். ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’சபாபதி’ திரைப் படம் நாளை 19ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசியது. ’சபாபதி’ சந்தானத்தின் படம் அல்ல, சபாபதி என்ற கதாபாத்திரத்தின் படம். இதில் எங்கேயும் சந்தானம் என்ற நடிகர் தெரியவே மாட்டார், சபாபதி என்ற கதாபாத்திரம்…