29
Sep
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.…