அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாற்காலி’. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தை ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற எம்.ஜி.ஆர் பாடல் இடம்பெறுகிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாற்காலி’ படத்தின் ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடல் குறுந்தகடை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=Xj9aju_o7IE&feature=youtu.be
Read More