08
Aug
Sai Baba Pictures சார்பில், இயக்குநர், நடிகர் ஜி. சிவா நடித்து தயாரித்துள்ள திரைப்படம் “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” . இந்திய திரையுலகில் மிக அசாதாரண முயற்சியாக ஒரே ஒரு கதாபாத்திரம் பங்குபெறும் இப்படம் வரும் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை இன்று சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் மணிசேகரன் செல்வா பேசியதாவது, இது எனக்கு முதல் படம் , இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சிவா சாருக்கு நன்றி, இந்தப் படத்தில் நிறைய விறுவிறுப்பான காட்சிகள் உள்ளது. அது போல பல டிவிஸ்ட்கள் காத்திருக்கிறது உங்களுக்கு பிடிக்கும். ஸ்டண்ட் காட்சிகளில் சிவா சார் அருமையாக நடித்துள்ளார், படம் நன்றாக வந்துள்ளது நான் படம் பார்த்துவிட்டேன் , உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும் நீங்கள்தான் மக்களிடம் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி. ஒளிப்பதிவாளர்…