வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வசூல் வேட்டை செய்ய தவறுவதில்லை. இதனால் விநிநோகிஸ்தர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ரெமோவின் மாபெரும் வெற்றியால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கான மார்க்கெட் பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் படங்களை வாங்க பெரிய நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக வேலைகாரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது என்று தயாரிப்பு நிறுவனமான ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் யூரோப் மற்றும் யூகே வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தியை ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.…
Read More
“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்ற பாடலில் இணைந்திருக்கின்றனர். அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இத்திரைப்படத்தை வித்தியாசமான புரமோஷன் செய்யும் வகையில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ரியாக்ஷனை படம் பிடித்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டனர். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைத்து பாடியுள்ளார். சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர், சிவகுமார், ஆர்ஜே பாலாஜி, விஜய்சேதுபதி, ஆர்யா, விஷ்ணுவிஷால், ரம்யா நம்பீசன், சமுத்திரக்கனி, லிங்குசாமி ஆகியோர்களுக்கு கிப்ட் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் சிலருக்கும் இந்த…
Read More
மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

மரகத நாணயம் ஆடியோ ரிலீஸ் + ஆல்பம்+ ஸ்பாட் நியூஸ்!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே…
Read More