15
Nov
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ? 1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை. அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது. அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. யாரும் தனி நடிகர்களாக…