21
Jun
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர் பேசுகையில், '' இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய்…