வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி!

அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல். படத்தில் பாடும் கே.ஆர்விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்சநஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும் . காவல் தலைவன் ஞானத்தமிழன் எந்தன் துணைவன் இன்பக்குமரன்.. என்ற வரிகளை வாணி பாடும்போது, அதிலும் இரண்டாவது முறை இந்த வரிகளை இழுக்கும்போது என்ன கெமிஸ்ட்ரியோ?. 1974லிருந்து பாடல் உருகவைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நடை உடை பாவனை அனைத்திலும கே.ஆர் விஜயா மாதிரியே இந்த பள்ளிக்கூட டீச்சரின் தாக்கமா? இல்லை தோழிக்கும் இந்த சேம் வாய்ஸ் இருந்ததால் குடைந்து கொண்டே வந்த தாக்கமா? என்ன இம்சையோ போடா வெங்கடேசா... அடுத்து எங்கம்மா சபதம். அன்பு மேகமே இங்கு ஓடி வா பாடல்.. மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் விவித பாரதியில் கேட்கும்போதெல்லாம். மனசு காற்றில் பறக்கும். சரி வாணி…
Read More
வேதாளம், கருப்பன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகி அவதாரம் எடுத்தார்!

வேதாளம், கருப்பன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகி அவதாரம் எடுத்தார்!

இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள். இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர்.அவர் தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார். அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல் வளத்தை பெரிதளவு பாராட்டியுள்ளனர். ” எனக்கு ஊக்கமளித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இசையில் பாடியது எனக்கு பெரும் பெருமை. தமிழில் ‘கூட்டன்’ என்ற படத்திலும் பாடியுள்ளேன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது உச்சரிப்பு சரியாக இருப்பது பெரும் பலமாக உள்ளது. ‘தொடர்ந்த பயிற்சி திருவினையாக்கும்’ என்பதை…
Read More