27
Jan
சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது !! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ? பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கும் படம். சலூன் வைக்க ஆசைப்படம் இளைஞன், இயற்கையை காப்பாற்றுவத் என எல்லாம் கலந்து கட்டிய திரைக்கதை.இயற்கையையும் விவசாயத்தையும் கூடிய சீக்கிரம் தமிழ் சினிமா காவு வாங்கி விடும் தங்கள் கிராமத்தில் சிங்கப்பூர் சலூன் வைத்திருக்கும் லால், அங்கிருக்கும் மக்களை தன் வித்தையால் முடி திருத்தம் செய்து அழகாக மாற்றுகிறார். இதை சிறு வயது முதலே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு தானும் ஒரு மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என எண்ணம் தோன்றுகிறது. இதற்காக முயற்சி செய்யும் அவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு படிப்படியாக முடி திருத்தம் செய்யும் கடைகளில் வேலை செய்து தொழிலைக் கற்றுக்கொண்டு பின் சொந்தமாக ஒரு சலூன் கடையை நகரத்தில் அமைக்கிறார். வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க, புதிய சலூன் கடையும்…