07
Jun
Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு, ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நம் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்து அரங்கேற்றப்பட்டது. மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக ஆடியோ விளக்கத்துடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட…