ஹாலிவுட் விருதுகளில் கலக்கும் ஜவான் !!

ஹாலிவுட் விருதுகளில் கலக்கும் ஜவான் !!

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம், ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA)விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட, ஒரே இந்தியத் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரா விருதுகளில், சிறந்த திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவென்பது, குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பல சிறந்த படங்களான அனாடமி ஆஃப் எ ஃபால் (பிரான்ஸ்), கான்க்ரீட் உட்டோபியா (தென் கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (பின்லாந்து) ஃபெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட்…
Read More
100 கோடியை வசூலித்த டங்கி !!

100 கோடியை வசூலித்த டங்கி !!

ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வகையில் தனது முத்திரையை பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் படம் பார்வையாளர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் முதல் தேர்வாகவும் இப்படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக அமைந்திருப்பதால்... அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் அதன் முத்திரையை பதித்த பிறகு, இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பிற்குள் நுழைந்து.. பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனை.. இந்தியாவில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே நடைபெற்றிருக்கிறது. 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் - இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இது அவருடைய இந்த ஆண்டின் திரைப்பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக 100 கோடி ரூபாய்…
Read More
டங்கி டிராப் 5, வெளியானது ஓ மஹி பாடல் !

டங்கி டிராப் 5, வெளியானது ஓ மஹி பாடல் !

டங்கி டிராப் 4 - டிரெய்லர் இறுதியாக ராஜ்குமார் ஹிரானி உருவாக்கியிருக்கும் அன்பு மிகுந்த உலகத்தினை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்தது. மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைக் கவர்ந்த இந்த டிரெய்லர், 24 மணிநேரத்தில் ஹிந்தி சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்தது. இந்த மயக்கும் கதையின் அடுத்த அத்தியாயத்தைப் படம்பிடித்து காட்டும்விதமாக, ஷாருக்கானும் டாப்ஸியும் இணைந்து தோன்றும் அழகான காதல் பாடலாக டங்கி டிராப் 5 ஓ மஹி வெளியாகியுள்ளது. ஹார்டி மற்றும் மனு கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள தன்னலமற்ற அன்பின் ஆழமான சக்தியை இந்த மெல்லிசைப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவர்கள் இதயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் நிலையில், மிகக்கடினமான வாழ்க்கையை மாற்றும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் காதல் கதையின் அழகு, பாடலின் உள்ளத்தைத் தூண்டும் மெலடியில் அற்புதமாக வெளிப்பட்டு, கேட்பவர்களின் மனதில் ஆழமாக எதிரொலிக்கிறது. அரிஜித் சிங்கின் மெய்சிலிர்க்க வைக்கும் குரல், இசை மேஸ்ட்ரோ ப்ரீதமின் அழகான…
Read More
வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள் !!

வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள் !!

100க்கும் மேற்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள் டங்கி படத்தைப்பார்க்க ஏன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார்கள் இதோ அதன் காரணம் இங்கே! ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK ரசிகர்கள் இந்த டிசம்பரில் டங்கியைப் பார்க்க இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். திரைப்படத்தின் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தூண்டும் உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகியுள்ளது டங்கி .இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து SRK திரைப்படத்தை இந்தியத் திரையரங்கில் அனுபவிப்பதன், தனித்துவமான மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் ஏங்குகிறார்கள். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகிற இந்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்திற்காக, உலகளாவிய கொண்டாட்டத்தை உருவாக்க உள்ளனர். ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள், ஷாரு எனும் நட்சத்திரத்தை உயிராக கொண்டாடுவதற்கும், அவரது படங்களை புதுமையான வழிகளில் விளம்பரப்படுத்துவதற்கும் பெயர் பெற்றவை, இதோ மீண்டும் டங்கி படத்திற்காக தங்கள் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.…
Read More
 இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்ட டங்கி படக்குழு !

 இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்ட டங்கி படக்குழு !

  டங்கி அற்புதமான நண்பர்களின் ஒரு நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது. ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், இந்த தீபாவளிக்கு நம் அன்புக்குரியவர்களுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் பண்டிகை உணர்வையும் குறிக்கும் வகையில், டங்கி திரைப்படத்திலிருந்து இரண்டு அட்டகாசமான புதிய போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். அன்பு நிறைந்த மனது, சந்தோஷம் மற்றும் நட்பின் பெருமையை சொல்லும் இரண்டு புதிய போஸ்டர்கள் டங்கி படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களால் நடிகர்களை அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சர், அனில் குரோவர் ஆகியோருடன் நம் அனைவரின் குடும்பத்தையும் நட்பையும் ஒருங்கிணைக்கும் ஷாருக்கானும் உள்ளனர். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில், இதயத்தைத் கவரும் படைப்பான, டங்கி படத்தின் உலகை அறிமுகப்படுத்தும், டன்கி டிராப் 1 பெரும் வரவேற்பை பெற்றாலும், இந்த…
Read More
ஜூக் பாக்ஸில் ஜவான்  பாடல்கள் !!

ஜூக் பாக்ஸில் ஜவான் பாடல்கள் !!

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழலாம் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு... முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஆக்சன் என்டர்டெய்னரான இப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அதை அடுத்த கட்டத்திற்கு மேலும் உயர்த்த தயாரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. தற்போது ஜுக் பாக்சில் அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களையும் வெளியிட்டு பார்வையாளர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள். 'வந்த எடம்', 'ஹய்யோடா' , ' நாட் ராமையா வஸ்தாவையா..' என ஜவான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை மேலும் உயர்த்துவதற்காக தயாரிப்பாளர்கள் தற்போது ஜுக் பாக்சில் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர். அதில் பார்வையாளர்கள் படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு…
Read More
ஷாருக்கான் & அட்லீ-யின் ‘ஜவான்’ பிரீ ரிலீஸ் ஈவன்ட் ஹைலைட்ஸ்!

ஷாருக்கான் & அட்லீ-யின் ‘ஜவான்’ பிரீ ரிலீஸ் ஈவன்ட் ஹைலைட்ஸ்!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார். இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், '' என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி. பாடலாசிரியர்…
Read More
போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர். இதுகுறித்து என்சிபி தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் பார்ட்டியில் நேற்று நடைபெற்ற பொது சோதனையில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More